"அச்சம் வேண்டாம் கவனம் அவசியம்"... கொரனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு

0 2384

கொரனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வைரஸ் தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு செயல் முறை விளக்கம் மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

கொரானா பாதிப்புக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகைய வார்டுகளில் பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொரானா தொற்றிவிடக் கூடிய அபாயம் உள்ளது.

இத்தகைய அச்சத்தை போக்கி, கொரானா தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என மருத்துவத் துறையினருக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தனிமைப் படுத்தப்பட்ட வார்டில் மருத்துவ சேவை செய்யும்போது, அதற்காக கொடுக்கப்பட்ட பிரத்யேக பூட்ஸ், மேலங்கி, கண்ணாடி, தலை கவசம் ஆகியவற்றை எவ்வாறு அணிய வேண்டும் என்பது குறித்து, நுண் வேதியல் துறை மருத்துவர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

கொரானா தொற்று அறிகுறிகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பல்வேறு மருத்துவ துறை தலைவர்கள் விளக்கம் அளித்தனர். ஆறு விதமான கை கழுவும் முறை, மருத்துவ பணியாளர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

மனிதனுக்கு செக் வைத்த கொரானாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மருத்துவர்கள் பணி மட்டும் போதாது, சுகாதார பணியாளர்கள், பொது மக்களின் பங்களிப்பு முக்கியம் என்பதை மருத்துவர்கள் விளக்கிப் பேசினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments